ETV Bharat / state

காப்பக வாசலில் விட்டுச்சென்ற பச்சிளம் குழந்தை - காவல்துறையின் தீவிர விசாரணை!

author img

By

Published : Nov 20, 2019, 6:08 AM IST

நாகப்பட்டினம்: பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை காப்பக வாசலில் விட்டுச் சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

baby

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மனநலம் பாதிக்கப்பட்டு, பெற்றோர்களை இழந்து அனாதையாக நிற்கும் குழந்தைகளை அறிவகம் காப்பகம் பாதுகாத்து பராமரித்து வருகின்றது. இந்த காப்பகத்தில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாப்பாக பாரமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை அறிவகம் குழந்தைகள் காப்பகம் வாசலில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு காப்பகத்தின் உள்ளே இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பிறந்து 10 நாட்களே ஆன ஆண்குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது.

உடனடியாக குழந்தையை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவித்ததையடுத்து, மயிலாடுதுறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காப்பக வாசலில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் காப்பகத்திலேயே குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தினர். இதனைதொடர்ந்து குழந்தை காப்பகத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து குழந்தையை விட்டுச் சென்றவர்களை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:

2 பெண் பிள்ளைகள் போதாதாம்: ஆண் குழந்தை கேட்டு அமெரிக்க மாப்பிள்ளை டார்ச்சர்

Intro:குழந்தைகள் காப்பக வாயிலில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விட்டு சென்ற மர்ம நபர் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அறிவகம் குழந்தைகள் காப்பகம் வாயிலில் ஆண்குழந்தையை வீசிசென்ற மர்ம நபர் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மயிலாடுதுறையில் அறிவகம் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனாதையாக உள்ள குழந்தைகளை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை அறிவகம் குழந்தைகள் காப்பகம் வாயிலில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்கள், சென்று பார்த்தபோது பிறந்து 10 நாட்களே ஆன ஆண்குழந்தை அனாதையாக கிடந்தது. உடனடியாக ஆண்குழந்தையை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியதால் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் குழந்தையை பார்த்த போலீசார் காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க ஒப்புதல் அளித்தனர். இதனால் அறிவகத்திற்கு குழந்தை எடுத்து செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.