மதுரை: மதுரை கீழவெளி வீதியில் பிரபல தேவாலயம் முன்பு இன்று மாலை இளைஞர் தலை வேறு உடல் வேறாக அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சாலையில் சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சிவபிரசாத், காவல்துறையினர் கொல்லப்பட்ட இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மாலை நேரத்தில் நடைபெற்ற இந்தப் படுகொலை சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மது அருந்த சென்ற இடத்தில் தகராறு... விசைத்தறி தொழிலாளி கொலை