ETV Bharat / state

ஊரடங்கால் பணம் இன்றி தவித்த இளைஞர் கிணற்றில் விழுந்து தற்கொலை - madurai district news

ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமலும் செலவுக்குப் பணம் இல்லாமலும் தவித்த மதுரையைச் சேர்ந்த இளைஞர், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கால் பணம் இன்றி தவித்த இளைஞர் கிணற்றில் விழுந்து தற்கொலை

author img

By

Published : Jun 12, 2021, 9:00 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பலர் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட செல்வ காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பொன்வண்ணன். இவரது மகன் பவுன் என்கிற பால் இளங்கோவன் (28). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

தற்போது ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமலும் செலவுக்கு பணம் இல்லாமலும் தவித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து பணம் எடுத்துச் சென்றுள்ளார். இதை கண்ட பெற்றோர்கள் பால் இளங்கோவனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வடகரையில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் குழு அமைத்து 1000 பேருக்கு உணவளிக்கும் இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.