அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள இளம் விஞ்ஞானிகள் சிறிய அளவிலான செயற்கைக்கோள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தனியார் ஆய்வு அறக்கட்டளை தலைவர் விவேகானந்தன் கூறுகையில், " வெறும் 53கிராம் எடையுள்ள 'கியூப்ஸ்' வடிவிலான செயற்கைக்கோளைப் புவி வெப்பமாதல் குறித்து ஆய்வு செய்ய அண்மையில் நாசாவின் உதவியோடு சோதனை முறையில் விண்வெளிக்கு அனுப்பினோம். அந்த செயற்கைக்கோளின் பணிகள் மிக பாராட்டத்தக்க வகையில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது".
மேலும், "2020ஆம் ஆண்டு இஸ்ரோவுடன் இணைந்து எங்கள் மாணவர்கள் தயாரிக்கும் புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன" என்றார்.
இதை தொடர்ந்து ஆய்வு மாணவர் ஆனந்த் மகாலிங்கம் கூறுகையில், "க்யூப்ஸ் வடிவிலான இந்த செயற்கை கோள்களை தயாரிப்பதில் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது நாசா மூலம் அனுப்பப்பட்டுள்ள க்யூப்ஸ் செயற்கைக்கோள் மிக அடர்த்தியான பைபர் மூலம் தயாரிக்கப்பட்டதாகும்" என்றார்.