மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ஓவியர் சுந்தர், தனது குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எல்லீஸ் நகர் பகுதியில் வட மாநில இளைஞரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒவியர் சுந்தர், காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையறிந்த இளைஞர்கள் ஒவியர் சுந்தரை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளனர். இதற்கு பயந்து தனது பிள்ளைகள் இருவரையும் வெளியூரில் படிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது அதே பகுதியைச் சேர்ந்த பலூன் சதீஷ், ஒண்டிப்புலி கார்த்திக், காசி ஆகிய மூன்றுபேரும் சுந்தரை தீபாவளியன்று கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து தன்னை காப்பாற்றக் கோரி ஓவியர் சுந்தர் சமூக வலைதளத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொலை வழக்கில் சிறை சென்று வந்த இளைஞர்கள், சாட்சி சொன்னவரை கொலை செய்ய நாள் குறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'அழகிரி அண்ணே நம்ம கட்சி நல்ல கட்சி, மதுரையில் ரொம்ப கெட்டுப்போச்சு' - மதுரையை பரபரப்பாக்கிய அஞ்சாநெஞ்சரின் தம்பிகள்!