ETV Bharat / state

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்ற பெண்
தீக்குளிக்க முயன்ற பெண்
author img

By

Published : Oct 6, 2021, 5:14 PM IST

மதுரை: ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி என்ற பெண், திமுக நிர்வாகி செல்வராஜை இரண்டாவதாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செல்வராஜ் தனது முதல் மனைவியான மல்லிகாவின் குடும்பத் தேவைக்காக முத்துமாரியிடம் ரூ.2.5 லட்சம் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகையைப் பெற்றுக்கொண்டு அதனைத் திரும்ப தருவதாகக் கூறி, பத்திரத்தில் எழுதிக் கொடுத்துள்ளார்.

தீக்குளிக்க முயன்ற பெண்

தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் செல்வராஜ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். தனது பணம் மற்றும் நகையைத் தருமாறு செல்வராஜின் முதல் மனைவி மல்லிகாவிடம் முத்துமாரி கேட்டுள்ளார்.

அதற்கு மல்லிகா பணத்தைத் திரும்ப தரமுடியாது எனக் கூறியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துமாரி ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல் துறையினர் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத்தெரிகிறது. இதன் காரணமாக முத்துமாரி இன்று (அக்.6) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.