ETV Bharat / state

சொத்துக்காக பெண் கொலை: உடன் பிறந்தவர்களின் வெறிச்செயல்! - சகோதரர்களால் பெண் கொலை

மதுரை: பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பான விவகாரத்தில் பெண் ஒருவரை கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது சகோதர, சகோதரிகளிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்துக்காக பெண் கொலை
சொத்துக்காக பெண் கொலை
author img

By

Published : Jan 27, 2021, 7:02 PM IST

மதுரை மாவட்டம் பெருங்குடி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மனைவி காத்தூன் பீவி (55). இவர் தனது பூர்வீக இடத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வீடுகட்டி வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவரது சகோதரர்கள், சகோதரிகள் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை உறவினர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதில் காத்தூன் பீவி காயமடைந்தார். பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த அவர் நேற்று (ஜன.27) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெருங்குடி காவல் துறையினர், காத்தூன் பீவியின் தாய், சகோத, சகோதரிகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கச்சியை கேலி செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் கொலை : 28 ஆண்டுகளுக்கு பின் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.