மதுரை: தினகரன் நாழிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாண்டியின் மனைவி தயாளு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் எனது கணவர் அட்டாக் பாண்டி ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது எனது கணவரின் தாயாரான ராமுத்தாய் உடல் நலம் முடியாமல் உள்ளார். எனது கணவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவசர விடுப்பு வழங்க மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார்.
எனவே, தனது தாயாரை பார்க்க வேண்டி எனது கணவரான பாண்டிக்கு 10 நாட்கள் அவசர விடுப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வு, வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.
இதனையும் படிங்க: தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்டக்கோரிய வழக்கு முடித்து வைப்பு