ETV Bharat / state

மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை எப்போது? ட்விட்டரில் பதிலளித்த மெட்ரோ நிர்வாகம்!

தனியார் நிறுவனம் அளித்துள்ள சாத்தியக்கூறு அறிக்கையைப் பரிசீலித்து வரும் நிலையில் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை குறித்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.

மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை எப்போது? ... டிவிட்டரில் பதிலளித்த மெட்ரோ நிர்வாகம்!

author img

By

Published : Sep 19, 2022, 9:23 PM IST

மதுரை: சென்னையைத் தொடர்ந்து மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில், தெலங்கானாவைச் சேர்ந்த பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் பிரைவேட் கம்பெனி என்ற நிறுவனத்துக்கு இந்தப் பணியை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆய்வுப்பணியானது ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்றதாகவும்; மே மாதம் இறுதி வாரத்தில் அதற்கானப் பணிகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து தற்போது ஆய்வறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அறிவித்திருந்தது.

  • Once finalized by CMRL, the same shall be forwarded to Government of Tamil Nadu, after consultation with Stakeholder Departments.
    2/2

    — Chennai Metro Rail (@cmrlofficial) September 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக ட்விட்டரில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள சென்னை மெட்ரோ நிர்வாகம், 'சாத்தியக்கூறுகள் தொடர்பான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் தனியார் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. தற்போது அந்த அறிக்கை பரிசீலனையில் உள்ள நிலையில், செயல்படுத்த உள்ள பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தமிழ்நாடு அரசிடம் முழு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும்' எனக் கூறியுள்ளது.

இதையும் படிங்க:மகளின் உண்டியல் பணத்தில்தான் லாட்டரி சீட்டை வாங்கினேன் - லாட்டரியில் ரூ.25 கோடி வென்ற அனூப் பேட்டி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.