மதுரை மாவட்டம் மேலூர் காவல் ஆய்வாளர் சார்லஸ், பேருந்து நிலையம் வழியே செல்லும் போதெல்லாம் அங்கிருக்கும் கோயில் காளைக்கு உணவுப்பொருள்களை வழங்குவார். அவரை எதிர்பார்த்து காத்து இருப்பது போல சாலையில் திரியும் கோயில் காளை ஆனந்தத்தில் துள்ளி குதித்தவாறு வாகனத்தை நோக்கி ஓடிவரும்.
காவல் ஆய்வாளர் தினமும் வாழைப்பழங்கள், உணவுப் பொருள்கள் போன்றவற்றை காளைக்கு வழங்கிவருகிறார். மேலும், அவர் கொடுக்கும் உணவை நிதானமாக உண்டபின் நன்றி தெரிவிப்பதுபோல அவரது கையை நாக்கால் வருடிக் கொடுத்து விட்டுச் செல்லும். காவல் ஆய்வாளருக்கும் காளைக்கும் இடையே தினசரி நடக்கும் அந்த ஐந்து நிமிட பாசப்போராட்டம் காண்போரை வியப்பில் ஆழ்த்திவருகிறது.