ETV Bharat / state

கன்னியாகுமரி டூ காசி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நாளை (டிச.17) முதல் துவக்கம்..! - tirunelveli

Southern Railway Notification: மதுரை வழியாக காசிக்கு வாராந்திர ரயில் சேவை நாளை (டிச.17) முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி - காசி சிறப்பு ரயில் சேவை
கன்னியாகுமரி - காசி சிறப்பு ரயில் சேவை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 8:29 PM IST

மதுரை: கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாகக் காசிக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை நாளை (டிச.17) முதல் துவங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கன்னியாகுமரி - பனாரஸ் - கன்னியாகுமரி வாராந்திர ரயில் சேவை நாளை (டிச.17) கன்னியாகுமரியிலிருந்து துவங்க இருக்கிறது. இந்த ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நாளை மாலை 5.30 மணிக்குத் துவக்கி வைக்கிறார்.

திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லும் இந்த ரயிலுக்கு நாளை இரவு 8 மணிக்குத் திருநெல்வேலியில் வைத்து வரவேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ரயில் ஆர்வலர்கள், பயணிகள் நலச் சங்கத்தினர், ரயில் பயணிகள், பொதுமக்கள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தப் பகுதியில் வழக்கமான ரயில் சேவை டிசம்பர் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பனாரசிலிருந்து கன்னியாகுமரி விரைவு ரயில் (16368) இயக்கப்பட இருக்கிறது. மறு மார்க்கத்தில் டிசம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமை முதல் கன்னியாகுமரியிலிருந்து பனாரஸ் காசி எக்ஸ்பிரஸ் ரயில் (16367) சேவை துவங்க உள்ளது. மேலும், இந்த சிறப்பு ரயிலுக்கான பயணச் சீட்டு முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.