தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்தின் புதிய மேலாளராக வி.ஆர்.லெனின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இந்த பதவியில் இருந்து வந்த செல்வி நீனு இட்டியேரா சென்னை தெற்கு ரயில்வேயின் முதன்மை போக்குவரத்து திட்டமிடல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
![இவர் ரயில்வே பெட்டக தென் பிராந்திய தலைமைப் பொதுமேலாளராகப் பணியாற்றியவர் ஆவார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/madurai-rly-manager-vr-lenin-from-apr-25-19-31556207191222-100_2504email_1556207202_35.jpg)
லெனின் 1990ஆம் ஆண்டு இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டவர் ஆவார். வடக்கு ரயில்வேயிலும், தெற்கு ரயில்வேயிலும் ரயில் போக்குவரத்து, வணிகம், பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகிய பல பிரிவுகளில் உயர் அலுவலராக இவர் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக, இவர் ரயில்வே பெட்டக தென் பிராந்திய தலைமைப் பொது மேலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.