ETV Bharat / state

பசியின் கொடுமையால் நாய் சாப்பிட்ட உணவை உண்ட முதியவர் - வைரல் வீடியோ

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே பசியின் கொடுமையால் நாய் சாப்பிட்ட உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த முதியவருக்கு இளைஞர் உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பசியின் கொடுமையால் நாய் சாப்பிட்ட உணவை உண்ட முதியவர் - வைரல் வீடியோ
பசியின் கொடுமையால் நாய் சாப்பிட்ட உணவை உண்ட முதியவர் - வைரல் வீடியோ
author img

By

Published : Nov 2, 2022, 1:30 PM IST

Updated : Nov 2, 2022, 3:58 PM IST

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சாய் மயூர் என்ற இளைஞர் நாள்தோறும் தெருக்களில் அலையும் நாய்களுக்கு சொந்த செலவில் உணவுகளையும், பிஸ்கெட்களையும் வழங்கி வருகிறார். மேலும் தெரு நாய்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ, தெரு நாய்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினாலோ நாயை மீட்பதற்காகவே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றையும் இயக்கி வருகிறார்.

தினமும் கோழிக்கடைகளில் சில்லறை இறைச்சிகளை வாங்கி, அதனை சோற்றுடன் மஞ்சள் சேர்த்து அதனை நாய்களுக்கு வழங்கி வருகிறார். தனது இருசக்கர வாகனத்தில் அந்த உணவை எடுத்துச்சென்று மாநகரின் பல்வேறு பகுதியிலும் உள்ள தெரு நாய்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகேயுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் நாய்களுக்கு உணவை வழங்கினார். அதனை நாய்கள் சாப்பிட்ட பின்பு மீதியிருந்த உணவை, அந்தப் பகுதியில் சாலையோரமாக படுத்துக்கிடந்த முதியவர் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார்.

இதனைப்பார்த்த சமூக ஆர்வலர் மயூரி, 'இது நாய் சாப்பிட்ட சாப்பாடு. இதனை சாப்பிடாதீர்கள்' என தடுத்து அவரை அழைத்துச்சென்று அருகில் உள்ள டீக்கடையில் வடை, பஜ்ஜி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து பசியாற்றினார்.

தொடர்ந்து பசியில் வாடியவரிடம் விசாரித்த போது மதுரை புதூர் சங்கர் நகர் பகுதியைச்சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. மேலும் பசியில் வாடியவருக்கு தகப்பனார் தவிர யாரும் இல்லை எனக் கூறியுள்ளார்.

பசியின் கொடுமையால் நாய் சாப்பிட்ட உணவை உண்ட முதியவர் - வைரல் வீடியோ

இதனையடுத்து சமூக ஆர்வலர் மயூர் டீக்கடையில் முதியவர் தினசரி என்ன கேட்டாலும் சாப்பிட வழங்குங்கள் எனவும்; அதற்கான தொகையை மாதம்தோறும் செலுத்திவிடுகிறேன் எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க:ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி கடிதம் - டி.ஆர்.பாலு அழைப்பு

Last Updated : Nov 2, 2022, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.