மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வலையங்குளத்தைச் சேர்ந்த பெருமாளின் மகள் திவ்யா. இவர் அதே ஊரில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி திவ்யா, பள்ளி செல்வதற்காக நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் லாரி ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெருங்குடி காவலர்கள், சிறுமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் போக்குவரத்தை சரிசெய்தனர்.
அப்பகுதியில் சாலை தடுப்புகள் முறையாக அமைக்கப்படாமல் இருப்பதே, இதுபோன்ற விபத்துகள் நேர்வதற்குக் காரணம் என்று வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..!