ETV Bharat / state

‘வைகோ ஒரு தேசவிரோத சக்தி’ - ஹெச். ராஜா

மதுரை: வைகோ குறித்த எனது கருத்தை தான் நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியுள்ளது என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

வைகோ ஒரு தேச விரோத சக்தி - எச் ராஜா
author img

By

Published : Jul 6, 2019, 12:10 PM IST

மதுரையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘பட்ஜெட்டில், மத்திய அரசு ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளித்துள்ளது. இது நடுத்தர, கீழ் நடுத்தர மக்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, விவசாயம், வேலைவாய்ப்பு சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளதோடு, விவசாயத்தில் அரசாங்கமே நேரடியாக முதலீடு செய்யும் என்று அறிவித்திருப்பது முதல் முறையாகும். கிராமப்புற வளர்ச்சி, வேலை வாய்ப்பினை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது.

‘தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்’ என்ற கூற்றின்படி திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், வேலூர் தொகுதியில் மறுபடி தர்மம் வெல்லும். வைகோ ஒரு தேசவிரோத சக்தி என்று நான் பலமுறை கூறி வருவதையே இன்றைய நீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் சாலை வசதிகள் தொழிற்சாலைகளே வரக்கூடாது என்ற நோக்கத்தில் வைகோ, சீமான், திருமாவளவன் உள்ளிட்ட நபர்களும், மக்கள் அதிகாரம், மே 17 உள்ளிட்ட அமைப்புகளும் இயங்கி வருகிறார்கள். அவர்கள் அனைவருமே அர்பன் நக்சல்கள்’ என்றார்.

ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பு

மேலும், உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, ‘திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று கருணாநிதி தெரிவித்திருந்தார். ஆனால் சங்கர மடங்களில் வாரிசுகள் யாரும் வருவதில்லை. திமுகவில் தான் தற்போது அது நடந்துவருகிறது. இருப்பினும், உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என ஹெச். ராஜா தெரிவித்தார்.

Intro:வைகோ குறித்த எனது கருத்தைத் தான் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது எச் ராஜா பேட்டி

வைகோ ஒரு தேச விரோத சக்தி என்று நான் பலமுறை கூறி வருவதையே இன்றைய நீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துள்ளது அதனை நான் வரவேற்கிறேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா மதுரையில் பேட்டிBody:வைகோ குறித்த எனது கருத்தைத் தான் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது எச் ராஜா பேட்டி

வைகோ ஒரு தேச விரோத சக்தி என்று நான் பலமுறை கூறி வருவதையே இன்றைய நீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துள்ளது அதனை நான் வரவேற்கிறேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா மதுரையில் பேட்டி

மேலும் அவர் கூறுகையில், இன்று வெளியாகியுள்ள பட்ஜெட்டில் மத்திய அரசு 5 லட்சம் வரை வருமான வரி விளக்கு அளித்துள்ளது இது நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது அதுமட்டுமன்றி விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளதோடு விவசாயத்தில் அரசாங்கமே நேரடியாக முதலீடு செய்யும் என்று அறிவித்திருப்பது முதல் முறையாகும்

இதன் வாயிலாக கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் கிராமப்புற சாலைகள் மேம்பாடு போன்றவற்றில் அதிக நிதி ஒதுக்கீடு காரணமாக இந்த வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பினை மையமாக கொண்டு இந்த பட்ஜெட் கொண்டுவரப்பட்டுள்ளது

கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே நாட்டில் உள்ள அனைவருக்கும் கழிவறை வசதி என்பதை வாக்குறுதி அளித்து அதை இந்த அரசு நிறைவேற்றி இருக்கிறது அதன் தொடர்ச்சியாக 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு எரிவாயு வசதி செய்து தரப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது

உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று கருணாநிதி தெரிவித்திருந்தார் ஆனால் சங்கர மடங்களில் வாரிசுகள் யாரும் வருவதில்லை கொள்கை ரீதியாக திமுகவோடு பாஜக முரண்படுகிறது பரம்பரையாக அந்த கட்சியில் வருவார்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் இருந்தபோதும் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

வைகோ குறித்து நான் நெடுநாளாக சொல்லி வருகின்ற தேசவிரோத சக்தி என்பதை நீதிமன்றம் இன்றைய தனது தீர்ப்பின் மூலம் உறுதி செய்திருக்கிறதுதமிழகத்தில் சாலை வசதிகள் தொழிற்சாலைகளை வரக்கூடாது என்று வைகோ சீமான் திருமாவளவன் உள்ளிட்ட நபர்களும்மக்கள் அதிகாரம் மே 17 உள்ளிட்ட அமைப்புகளும் இயங்கி வருகிறார்கள் இவர்கள் அனைவருமே அர்பன் நக்சல்

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வியது விளைவுதான் 37 எம்பிக்கள் ஆனால் நிச்சயமாய் வருகின்ற வேலூர் தொகுதியில் மீண்டும் தர்மம் வெல்லும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.