மதுரை: காண்டை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி - முருகேஸ்வரி தம்பதி, இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அருகிலுள்ள அரசு பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் வீட்டிற்கு எதிரே வசித்துவரும் செல்வம், கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்த முருகேஸ்வரியின் இரண்டு பிள்ளைகளை தகாத வார்த்தைகளால் பேசி, அரிவாளால் தாக்கியுள்ளார்.
இதில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாணவியின் தந்தை முனியாண்டி அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் செல்வத்தை கைது செய்தனர்.
ஜாமீனில் வெளிவந்த செல்வம், முருகேஸ்வரியின் மகள்களை பள்ளிக்கு செல்லும் வழியில் மிரட்டியுள்ளனர். இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முனியாண்டி - முருகேஸ்வரி தம்பதி மனு அளித்தனர்.
அதில், "எங்களது குடும்பத்திற்கும், செல்வத்திற்கும் எந்த பகையும் இல்லை. தேர்தல் முன்விரோதம் என பொய்யான காரணத்தை கூறி எங்களை தாக்குகின்றனர். பள்ளிக்கு செல்லும் போது தொடர்ந்து அச்சுறுத்துவதால் பிள்ளைகள் உணவு கூட உண்ணாமல் அச்சத்துடன் இருக்கின்றனர். அந்நபர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் " என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதன்முதலாக பாடநூலில் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள்