மதுரை: ஒத்தக்கடை அருகே உள்ள கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு, யா.கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆயி என்ற பூரணம் அம்மாள், தனக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.
ஆயி அம்மாளின் இந்த செயலுக்கு பலரும் பாரட்டுக்களைத் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று மதுரையில் உள்ள ஆயி அம்மாளின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அழியா கல்விச் செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
-
அழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
— Udhay (@Udhaystalin) January 17, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
மறைந்த… pic.twitter.com/E990obibTz
">அழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
— Udhay (@Udhaystalin) January 17, 2024
மறைந்த… pic.twitter.com/E990obibTzஅழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
— Udhay (@Udhaystalin) January 17, 2024
மறைந்த… pic.twitter.com/E990obibTz
மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக இந்த மகத்தான சேவையை செய்திருக்கும் அவருக்கு, குடியரசு தினத்தன்று நம் முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் சிறப்பு விருதினை அறிவித்துள்ள நிலையில், நாம் நினைவுப்பரிசை வழங்கி அவரை கவுரவித்தோம். அவரின் மகளுடைய திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். ஆயி அவர்களின் கல்விக்கான அரும்பணி காலத்திற்கும் நிலைத்திருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
ஒத்தகடை அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆயி என்ற பூரணம் அம்மாள் (52), தற்போது மதுரை சர்வேயர் காலனியில் வசித்து வருகிறார். மதுரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றிய இவரது கணவர், கடந்த 1991ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், வாரிசு அடிப்படையில் தற்போது ஆயி பூரணம் அம்மாள் பணியாற்றி வருகிறார்.
பூரணம் அம்மாள் தனது மகள் ஜனனியை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகள் ஜனனி (30) உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தனது மகளின் நினைவாக, அவருக்கு சொந்தமானச் நிலத்தை பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தானமாக வழங்கியுள்ளார். கல்விக்காக தனக்கு சொந்தமான நிலத்தை தானமாக வழங்கிய ஆயி அம்மாளின் சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆயி என்ற பூரணத்தை பாராட்டி, அவரை பெருமைப்படுத்தும் வகையில், வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காணும் பொங்கல்; வண்டலூர் பூங்காவில் குவிந்த மக்கள்!