ETV Bharat / state

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2,000 காவலர்கள் - pasumpon

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் 2,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2,000 காவலர்கள்

author img

By

Published : Oct 26, 2022, 1:12 PM IST

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் இன்று (அக் 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற இம்மானுவல் குரு பூஜைக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற வாகனங்களில், மதுரை மாவட்டத்திற்க்குள் விதிமுறைகளை மீறிச் சென்றதாக 31 வழக்குகள் சிலைமான் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்குகளில் 25 கார், 6 இரு சக்கர வாகனங்கள் என 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள 31 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். சிறப்பு தனிப்படையினர் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். வாகனங்களில் விதிமுறைகளை மீறி செல்வோர்களை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் செய்தியாளர் சந்திப்பு

மிக அதிவேகமாக செல்வோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவர் ஜெயந்திக்கு மதுரை மாவட்டத்தில் 2,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேவர் ஜெயந்திக்கு முதலமைச்சர் வருவதால் அதிக அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறப்படும் இடத்தில் நடவடிக்கைகள் எடுத்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். விதிமுறைகளைப் பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் ஈபிஎஸ் ஆப்சென்ட்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.