மதுரை: மாநகருக்குட்பட்ட வில்லாபுரம் மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளில் சிற்ப சாஸ்திர பயிற்றுநர் தேவி அறிவு செல்வம் ஆய்வு செய்தபோது சதி கற்களை கண்டறிந்தார்.
வில்லாபுரம் நடுகல் இருப்பிடம்:
தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியை இணைக்கும் பாலத்தின் இடது பக்கம் சாலை ஓரத்தில் மூன்றடி உயர முக்கோண பலகை கல்லில் ஆண் பெண் உருவங்கள் இருக்கின்றன. இருவரும் ஏத்தி இறுக்கி கட்டிய பக்கவாட்டு கொண்டை அணிந்துள்ளனர் என தேவி அறிவு செல்வம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இருவரும் சுகாசனத்தில் உள்ளனர். வில்லாபுரம் பகுதி கண்மாயாக இருந்த பொழுது காத்த வீரருக்காக எடுக்கப்பட்ட நடுகல் என இதனை கருதலாம். கண்மாய்க் கட்டடமாக மாறும்பொழுது கண் மை கரையின் ஓரத்தில் இருந்த இந்த நடுகல்லானது கட்டடமாக மாறும்பொழுது சாலையின் ஓரத்தில் இப்பொழுது எடுத்து வைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது என தெரிவித்தார்.
சிந்தாமணி சதிகல் இருப்பிடம்:
மதுரை - சிந்தாமணி சாலையின் இடது பக்க சாலை ஓரத்தில் பின்பக்கம் தெரிவது மாதிரயாக உள்ளது. 2 அடி உயரம் மற்றும் நீளம் கொண்ட சதுர வடிவ பலகை கல்லில் பெண், ஆண் உருவங்கள் சுகாசனத்தில், இடது பக்கவாட்டு கொண்டை அணிந்து, கை வளை, இடுப்பில் ஆடை அணிந்து, நீள் காதுடன் உள்ளனர் என்றார்.
ஆணின் கைகளானது தொடையிலும், பெண்ணின் இடது கையானது இடது சிதைந்துள்ளதால் கையில் இருப்பதை அறிய முடியவில்லை. சிற்ப உருவ அமைதியை வைத்து பார்க்கும் பொழுது இரண்டு சதி கற்களின் காலம் 300-400 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என கருத தோன்றுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் நாமதேசியா..': அமைச்சர் சமஸ்கிருதத்தில் செய்த அர்ச்சனை