ETV Bharat / state

'போட்டிப்போட்டுக் கொண்டு தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகள்' - சு. வெங்கடேசன் எம்பி - கரோனா ஊரடங்கு

மதுரை: மத்திய, மாநில அரசுகள்  உலகத்தின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களைத் தாயகம் அழைத்து வருவதில் போட்டிப்போட்டு வஞ்சித்துவருவதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் சாடியுள்ளார்.

Tn mp urge to state and central to rescue Tamil people in across the world

author img

By

Published : Jun 21, 2020, 12:22 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துவருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சில நாள்களில் ஒரு கோடியைத் தொட்டுவிடும்.

தொற்று உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியவுடன், அந்த நாடுகளிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வருவதற்கான 'வந்தே பாரத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியர்கள் நாடு திரும்ப ஆர்வம் காட்டினர். அதற்குரிய கட்டணத்தை வசூல் செய்து ஏர் இந்தியா விமானங்கள் இந்தியர்களை திரும்ப கொண்டுவந்து சேர்க்கின்றன .

தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய வளைகுடா நாடுகளிலிருந்து தாயகம் திரும்ப லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பதிவு செய்துள்ளனர். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 34 லட்சம். இதில் மலையாளிகளின் எண்ணிக்கை 10 லட்சம். அவர்களுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் 4.5 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.

வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் செய்வதறியாது தமிழர்கள் சிக்கித் திகைத்து நிற்கின்றனர். பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டுவரும் 'வந்தே பாரத்' திட்டத்தில் இதுவரை ஆயிரத்து 175 முறை விமானங்களை இந்திய அரசு இயக்கியுள்ளது. இவற்றுள் 279 விமானங்கள் கேரளாவிற்கு மட்டும் இயக்கப்பட்டன. இந்த 279 பயணத்திலும் 238 விமானங்கள் வளைகுடா நாடுகளிலிருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டுள்ளன.

ஜூன் 4ஆம் தேதிவரை சுமார் 25,000 மலையாளிகள் கேரளா திரும்பியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவற்றுள் 20,000 பேர் வளைகுடாவிலிருந்து மட்டும் திரும்பியுள்ளனர். மொத்தமாக 10,000 பேர் கேரளாவிற்குத் திரும்பியுள்ளனர். அதேநேரத்தில் தமிழ்நாட்டிற்கு இதுவரை 73 விமானங்கள் மட்டுமே வந்துள்ளன. அதில் 27 விமானங்கள் மட்டுமே வளைகுடா நாடுகளிலிருந்து மக்களைத் திரும்ப அழைத்துவந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட விமானச் சேவையின் மூலமாக இதுவரை மொத்தமாக 14,000 தமிழர்கள் மட்டுமே திரும்ப வந்துள்ளனர். அவற்றுள் வளைகுடா நாடுகளிலிருந்து திரும்பிவந்த தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 5,000 மட்டுமே. அதாவது ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே. ஏன் இந்த பாரபட்சம்?

கேரளா மக்களை அதிக எண்ணிக்கையில் திரும்ப அழைத்துவர கேரள அரசு தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்துகிறது. 'வந்தே பாரத்' திட்டத்தில் அதிக விமானங்களைக் கோரியுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசோ இதற்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. உலகெங்கும் பதிவுசெய்து காத்திருக்கும் தமிழர்களை அழைத்துவர எந்த முன் முயற்சியும் மாநில அரசிடம் இல்லை.

அதனால் மிகக்குறைவான விமானங்களே தமிழ்நாட்டிற்கு இயக்கப்படுகின்றன. கேரளாவுக்கு இயக்கப்பட்டுள்ள விமானங்களில் நான்கில் ஒரு பங்கு விமானங்களே இங்கு இயக்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து தமிழ்நாடு வர விரும்பியவர்கள் மாநிலத்திற்கு வந்துசேர இரண்டு மாதங்களுக்கு மேலாகும்.

வெளிநாடு வாழ் மலையாளிகளுக்கென தனியாக ஒரு துறை கேரளாவில் செயல்பட்டுவருகிறது. கரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்தவுடன், தாயகம் திரும்ப விரும்புவோரை இணையதளத்தில் பதிவுசெய்ய கேரள அரசாங்கம் உத்தரவிட்டது. எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதற்குறிய முன்னுரிமையுடன் கூடுதல் விமானங்களை இயக்கி தம் மக்களைத் திரும்ப அழைத்துக்கொண்டது.

தமிழ்நாடு அரசு, சில கட்டங்களில் தனிமைப்படுத்துவதற்கான கட்டமைப்புகள் இல்லையென காரணத்தைக் கூறி விமானத்தை இயக்க வேண்டாம் என்று தெரிவித்தது. வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதியில் ஒரு விமானம் கூட தமிழ்நாட்டிற்கு இயக்கப்படவில்லை.

வந்தே பாரத் விமானங்கள் இல்லாதபோதும் தமிழ் மக்கள், தங்கள் பகுதியில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் மூலமும், சில நிறுவனங்களின் மூலமும் அவர்களாகவே ஒன்றிணைந்து தனி விமானத்தைப் பிடித்து தமிழ்நாடு திரும்பினால் அவர்களிடம் அரசு நடந்து கொள்ளும்விதம் பகல் கொள்ளை போல் உள்ளது.

நோய்த் தொற்றிலிருந்து தப்பித்துச் சொந்த மண்ணிற்கு வந்தால் போதும் என்று தங்களின் சேமிப்புகள் அனைத்தையும் இழந்து, கடன் வாங்கி விமானத்தில் தமிழ்நாடு வந்தால், சோதனைக்கும், தனிமைப்படுத்துதலுக்கும் தமிழ்நாடு அரசு வசூலிக்கும் கட்டணம் நபர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் அளவுக்கு இருக்கிறது. இதேநேரத்தில் கேரள அரசு, அவர்கள் வந்தே பாரத் மூலமாக வந்தாலும், அவர்களாகவே விமானத்தைப் பதிவுசெய்துவந்தாலும் அனைவரையும் ஒரே மாதிரியாகக் கையாளுகிறது. அனைவருக்கும் ஒரே விதிதான்.

கரோனா காலத்தில் உலகெங்கும் வசிக்கும் தமிழர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். தங்களின் தாயகத்திற்குத் திரும்ப நினைக்கும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவாக மத்திய அரசும் இல்லை, மாநில அரசும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.

கர்ப்பிணிகள், முதியவர்கள், இறப்பு வீட்டிற்கு வரவேண்டியவர்கள், விசா முடிந்தவர்கள், வேலையிழந்தவர்கள் என எல்லோரின் குரலும் விடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக இதுகுறித்து அக்கறையுடன் கூடிய தலையீட்டினை அதிகரித்து, தனிச் சிறப்பு அலுவலரை நியமிக்கவேண்டும். தொடர்ந்து மத்திய அரசையும் நிர்பந்தித்து, துடிப்போடு செயல்பட்டால் மட்டுமே துயரத்தில் வாழும் தமிழர்களுக்கு நியாயம் வழங்க முடியும்.

வந்தே பாரத் விமானங்களின் வழியாக வந்தாலும், தனித்த ஏற்பாட்டில் வந்தாலும் அனைவரையும் ஒன்று போல் நடத்தும் முடிவை உடனடியாகத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.