தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக தன் மீது பதிவிட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், “தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பாக கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாகக் கூறி தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறும் வகையிலோ, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலோ எவ்விதமான செயலிலும் நான் ஈடுபடவில்லை. ஆகவே தூத்துக்குடி காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஏப்.08) நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால், சிபிஐ தரப்பை எதிர் மனுதாரராகச் சேர்த்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் அதிமுகவினரிடையே உள்கட்சி பூசல்: கார் கண்ணாடி உடைப்பு!