மதுரை சிம்மக்கல் அருகே உள்ள அண்ணாமலை திரையரங்கில் நடிகர் சிவாஜிகணேசன் நடித்த வசந்த மாளிகை திரைப்படம், 47 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் வடிவத்தில் தற்போது வெளியாகி உள்ளது.
இப்படம் இரண்டாவது வாரமாக திரையிடப்பட்டு வருகிறது. ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகம் வருவதால், அவர்களை மகிழ்விக்கும் விதமாக குங்குமச்சிமிழ், குலுக்கல் முறையில் பட்டுப் புடவை ஆகியவற்றை சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.