ETV Bharat / state

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கடும் எதிர்ப்பு! - டோல் கேட் கட்டணம்

தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டோல் கேட் கட்டணம் ரூ.5 முதல் ரூ.55 வரை உயர்த்தி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

increase in toll fees
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
author img

By

Published : Mar 24, 2023, 8:20 AM IST

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் முனைவர் ந.ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI), தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் 2023 ஏப்ரல் 1 முதல் உபயோகிப்பாளர் வாகனக் கட்டணத்தை ரூ.5 முதல் ரூ.55 வரை உயர்த்த உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை தமிழ்நாட்டில் 55 சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளன. 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச் சாவடிகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதியும், மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதியும், உபயோகிப்பாளர் வாகனக் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி அறிவிப்பு செய்து வருகிறது. ஏற்கனவே, தற்போதுள்ள அதிகப்படியான உபயோகிப்பாளர் வாகனக் கட்டணம் குறித்து பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கூடுதல் கட்டண அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் அபரிமிதமான விலையேற்றத்தால் தொழில் வணிகத் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உபயோகிப்பாளர் வாகனக் கட்டணம் கூடுதலாக உயர்த்தப்பட்டிருப்பது, தொழில் வணிகத் துறையினர் மட்டுமல்லாது, லாரி, பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றார்.

காய்கறிகள், பழங்கள், தானியங்கள், நெல், சமையல் எண்ணெய், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் அனைத்து வகையான பிற பொருட்களையும் லாரிகள் மூலம் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால், சுங்கக் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகைப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதோடு, பண வீக்கத்தையும் அதிகப்படுத்தும்.

மேலும் 60 கி.மீ இடைவெளியில் டோல்கேட் எதுவும் அமைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 60 கி.மீ இடைவெளி தூரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளார். அதன்படி தற்போது தமிழ்நாட்டில் 60 கி.மீ இடைவெளிக்குள் தற்போது அமைக்கப்பட்டுள்ள சுமார் 16 சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், சுங்கச் சாவடி கூடுதல் கட்டண உயர்வு மக்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அத்துடன் தமிழ்நாட்டில் தாம்பரம் - திண்டிவனம் நெடுஞ்சாலை (பரனூர், ஆத்தூர்) சென்னை பைபாஸ் சாலை (வானகரம், சூரப்பட்டு) சென்னை - தடா நெடுஞ்சாலை (நல்லூர்) சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை (ஸ்ரீபெரும்புதூர், சென்னை சமுத்திரம்) மற்றும் மதுரை - திருச்சி நெடுஞ்சாலை (பூதக்குடி, சிட்டம்பட்டி) அமைக்கப்பட்டுள்ள ஒன்பது சுங்கச் சாவடிகளில் மூலதனச் செலவு மீட்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் மாதம் தொடங்கும் திருத்தத்தின் போது உபயோகிப்பாளர் வாகனக் கட்டணம் 40 சதவிகிதம் குறைக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபடத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது டோல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் (NHAI) முக்கியப் பணி அனைத்து மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைப்பது மற்றும் மேம்படுத்துவது ஆகும். பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமல்லாமல் சரக்குப் போக்குவரத்திற்கும் அத்தியாவசியமான தரமான சாலைகளை உருவாக்கும் பொறுப்பும் NHAI-க்கு உள்ளது. இதற்கு மத்திய அரசு நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை ஏற்படுத்தி, சுங்கச்சாவடிகளை அமைத்து அவற்றை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது.

இந்தியாவில் உள்ள 29,666 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக தினசரி சுமார் 64.50 லட்சம் வாகனங்கள் கடந்து செல்வதோடு ரூ.135 கோடி கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சுங்கக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. ஆனால் குத்தகைக்கு எடுத்த சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் யாரும் அதற்கு கட்டுப்படுவது கிடையாது.

தற்போதுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை அல்லது ஒப்பந்தக்காரர்களால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. மேலும் சாலை ஒப்பந்ததாரர் சுங்கவரி சேகரிப்பில் 15 சதவீதம் சாலையின் வருடாந்திர பராமரிப்புக்காக செலவிட வேண்டும். ஆனால் ஒப்பந்ததாரர் இதனை முறையாக கடைப்பிடிப்பதும் இல்லை. இதனால் வாகன உபயோகிப்பாளர்கள் மோசமான சாலைகளில் பயணிப்பதற்கு அதிகப்படியான டோல் கட்டணத்தைச் செலுத்தி மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 4,50,000 லாரிகள் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. டீசல், ஆயில், பேட்டரி, டயர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு போன்றவற்றால் லாரித் தொழிலை சரிவர செய்ய இயலாத நிலையில் சுமார் 1 லட்சம் லாரிகள் வங்கித் தவனையை முறையாக செலுத்தாததால் முடக்கப்பட்டுள்ளன. சுமார் 50,000 லாரிகள் பழுது மேற்கொள்ளாத நிலையில் செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் இத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ளோர் மிகுந்த பாதிப்படைந்துள்ளதோடு மறைமுகமாக எலக்ட்ரிசியன், பெயிண்டர், பாடி கட்டுவோர், மெக்கானிக் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், க்ளீனர்கள் என பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுட்கால சாலை வரி ஒவ்வொரு புதிய வாகனத்திற்கும் அரசுக்கு செலுத்தப்படுகிறது. எனவே, சுங்கச்சாவடிகளில், வாகனத்திற்கு ஒவ்வொரு முறையும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமாகாது. அனைத்து அத்தியாவசிய மற்றும் நுகர் பொருட்களின் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இத்தகைய சுங்கக் கட்டண உயர்வுகள் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாகப் பாதிக்கும். எனவே சாலை அமைக்கப்பட்டு குறிப்பிட்ட கால வரையறைக்குப் பின் சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்வதோடு, வருடாந்திர டோல் கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டுமென தொழில் வணிகத் துறை மற்றும் பொதுமக்களின் சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மத்திய அரசை வலியுறுத்துகிறது என்றார்.

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 55 சுங்கச் சாவடிகளில் அன்றாடம் வசூலிக்கப்படும் உபயோகிப்பாளர் வாகனக் கட்டண விபரம், சுங்கச் சாவடிகளில் தினசரி கடந்து செல்லும் மொத்த வாகன விபரங்கள் மற்றும் சாலை மற்றும் சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபம் போன்ற விபரங்களை உபயோகிப்பாளர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில், ஓர் வெள்ளை அறிக்கையை மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் வெளியிட வேண்டும்" என அறிக்கை மூலம் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: "திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது" - பி.ஆர் பாண்டியன் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.