ETV Bharat / state

சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை! - chennai university vc selection

மதுரை: சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

chennai university vc selection
chennai university vc selection
author img

By

Published : Jul 24, 2020, 4:27 PM IST

Updated : Jan 18, 2023, 3:00 PM IST

உயர் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்ந்தெடுத்திட மார்ச் 4ஆம் தேதி அன்று அரசு ஆணை (அரசு ஆணை எண்: 48) வெளியிட்டது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம். ஜெகதீசன் தலைவராகவும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ப. ராமசாமி, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மருதமுத்து ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழு அறிவிக்கப்பட்ட உடனே பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது. பிரச்னைகளுக்குரிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தெரிந்தெடுக்கும் குழுவின் அதிகாரப்பூர்வ அலுவலராக முனைவர் ஜி. ரத்தினசபாபதி நியமிக்கப்பட்டார். 177 பேர் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். தெரிந்தெடுக்கும் குழுவினருடன் வரும் ஜூலை 28ஆம் தேதி அன்று ஆன்லைன் மூலம் நேர்காணலில் பங்கேற்குமாறு விண்ணப்பித்திருந்த நபர்களில் 12 பேருக்கு மட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சிறந்த கல்வியாளர்கள் பலரும் இந்தப் பட்டியலில் இல்லாமலிருப்பது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

இப்பட்டியலில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறோம். இவர் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே கல்வியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேராசிரியர் பதவியில் ஓராண்டு காலம் கூட இருந்திராத நிலையில் கல்யாணி மதிவாணன் துணைவேந்தர் பதவிக்கான தகுதி உடையவர் இல்லை என்பது சென்ற முறையே சுட்டிக்காட்டப்பட்டது. எந்த அடிப்படையில் இப்பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை தேர்ந்தெடுக்கும் குழுவினர் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

பாரம்பரியமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்படுபவர் சிறந்த கல்வியாளராகவும், நேர்மையுடன் செயல்படக்கூடிய ஒருவராகவும் இருந்திட வேண்டும் என்று தமிழ்நாட்டின் உயர்கல்வியில் அக்கறை கொண்டோர் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பெருமைகளை முன்னெடுத்துச் செல்லுமளவிற்குப் பொருத்தமான ஒருவரை இக்குழு தேர்ந்தெடுக்கும் என்று தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் நம்புகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க... ராஜஸ்தான் கிராமத்தின் 25 ஆண்டு கால தண்ணீர் தாகத்தை தீர்த்த வேளாண் பல்கலைகழகம்!

Last Updated : Jan 18, 2023, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.