ETV Bharat / state

மதுரையில் ரவுடிகளை ஒழிக்க அறிவுறுத்திய டிஜிபி சைலேந்திரபாபு

மதுரை: சட்டம் ஒழுங்கு குறித்து தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு, தென்மண்டல காவல் துறை உயர் அலுவலர்களுடன் இன்று (ஜூலை14) ஆலோசனை நடத்தினார்.

DGP sylendrababu conducting a Meeting
டிஜிபி சைலேந்திரபாபு
author img

By

Published : Jul 14, 2021, 5:32 PM IST

மதுரை: தென்மண்டல சட்டம் ஒழுங்கு குறித்து தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் மதுரை மாநகர காவல் ஆணையர், பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் கலந்துகொண்டனர்.

தென் மண்டலத்தில் ரவுடிகள்

தென் மண்டலத்தில் ரவுடிகள் மோதும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற மோதலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம், கடுமையான சட்டங்களின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினார்.

டிஜிபி சைலேந்திரபாபு

ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகளைத் துரிதமாக விசாரித்து அதிகபட்ச தண்டனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார். கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைத் தரம்பிரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

காவலர்களுக்குப் பாராட்டு

மதுரை மாநகரில் ஆயுதம் ஏந்திய இருசக்கர ரோந்து காவலர்களின் சிறப்பான பணியைப் பாராட்டினார். சிறப்பாகப் பணியாற்றிய ஆயுதம் ஏந்திய காவலர்களுக்கு வெகுமதி வழங்கி, பாராட்டினார். அதன்படி, 18 காவலர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபார் வெகுமதி வழங்கப்பட்டது.

முதல்நிலை காவலர் மாரிமுத்து, ஆயுதப்படை காவலர் காக்கரமுத்து, முதல்நிலை காவலர் செந்தில், ஆயுதப்படை காவலர் வெங்கடேஷ் பாபு, முதல்நிலை காவலர் சுந்தரமூர்த்தி, ஆயுதப்படை காவலர் கண்ணதாசன், முதல் நிலை காவலர் செல்வக்குமார் உள்பட 18 பேர் வெகுமதி பெற்றனர்.

நிவாரணம் வழங்கிய டிஜிபி
நிவாரணம் வழங்கிய டிஜிபி

நிவாரணம்

கரோனா, கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜோதிராஜ் குடும்பத்திற்கு உதவித் தொகையாக 50 ஆயிரம் ரூபாயை அவரது மகளிடம் வழங்கினார்.

முன்னதாக மதுரை மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு வருகைபுரிந்த தமிழ்நாடு காவல் துறைத் தலைவர்ர் சைலேந்திரபாபுவுக்கு, மதுரை மாநகர காவல் துறை சார்பாக ஆயுதப்படை காவலர்களின் மரியாதை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒலிம்பிக் பதக்க கனவு நிறைவேறும் - தன்ராஜ் பிள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.