ETV Bharat / state

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் கோயிலில் சிலை திருட்டு - மூன்று பேர் கைது! - madurai news

மதுரை: சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள பேச்சியம்மன் கோயிலில் மூன்று ஐம்பொன் சிலைகள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதோடு, மூன்று சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சிம்மக்கல் சிலை திருட்டு  பேச்சியம்மன் கோயில் சிலை திருட்டு  simmakkal panjaloga idol theft  madurai news  Simmakkal idol theft
பேச்சியம்மன் கோயிலில் சிலை திருட்டு
author img

By

Published : Aug 21, 2020, 7:26 PM IST

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை அருகேயுள்ள பேச்சியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) இரவு கோயிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் வளாகத்தில் இருந்த பிள்ளையார், பொன்னர்சங்கர் உள்ளிட்ட 3 ஐம்பொன் சிலைகளைத் திருடிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திலகர் திடல் காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஏற்கெனவே மதுரை மாநகர் பகுதியில் கோயில் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் பட்டியலை எடுத்து அதில், சந்தேகத்திற்குரிய செல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தான்தான் சிலைகளை திருடியதாகவும், சிலைகளை அனுப்பானடி பகுதியிலுள்ள பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேச்சியம்மன் கோயிலில் சிலை திருட்டு

இதைத் தொடர்ந்து கொள்ளையன் ஜெயராமன், பழைய இரும்புக்கடையின் உரிமையாளர்களான முகமது முஸ்தபா, செபஸ்தியான் ஆகியோரை கைது செய்துள்ள காவல்துறையினர், கும்பகோணத்தில் இருக்கக்கூடிய சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அம்மூவரையும் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதையும் படிங்க: சிம்மக்கல் பேச்சியம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.