மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்திவந்தார். இவரிடம் கல்மேடு பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் மது போதையில் சிகரெட் வாங்கியுள்ளனர்.
வாங்கிய சிகரெட்டுக்கு காசு தராமல் அந்த நபர்கள் வினோத்குமாரிடம் தகராறு செய்துள்ளனர். முதலில் வாய்த் தகராறாக இருந்து பிறகு கைகலப்பாக மாறியது.
இதில் வினோத்குமார் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிலைமான் காவல் துறையினர் மதுபோதையில் இருந்த மூன்று பேரை கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் மீசை ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்