ETV Bharat / state

திருப்பரங்குன்றம்-பழங்காநத்தம் புதிய பாலம்; மண் சேகரிப்பு பணி தொடக்கம்! - madurai district news

மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியிலிருந்து பழங்காநத்தம் வரையில் புதிய பாலம் கட்டுவதற்காக மண்ணின் தன்மையைச் சோதிக்க 30 இடங்களில் குழிதோண்டி மண் சேகரிக்கும் பணி தாெடங்கியுள்ளது.

திருப்பரங்குன்றம் புதிய பாலம்  மதுரை மாவட்டச் செய்திகள்  madurai district news  thiruparangundram bridge
திருப்பரங்குன்றம்-பழங்காநத்தம் புதிய பாலத்திற்கான கட்டுமானப் பணி தொடக்கம்
author img

By

Published : Jul 20, 2020, 11:41 AM IST

மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒருபகுதியாக பழங்காநத்தம் பகுதியிலிருந்து திருப்பரங்குன்றம் வரையில் 2.5 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் இன்று தொடங்கின.

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையோரத்தில் 14 இடங்களிலும், பசுமலையிலிருந்து பழங்காநத்தம் பகுதி வரை 16 இடங்களிலும் குழிகள் தோண்டி, மண் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. பாலம் கட்டுவதற்கு முன்பு பாலம் கட்டவுள்ள இடத்தின் மண்ணின் தன்மை சோதிக்கப்படுவது வழக்கம். பாலமானது திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையோரம் வருவதால் ஒவ்வொரு 100 மீட்டர் இடைவெளியிலும் 14 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, மண் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மண் பரிசோதனை முடிந்து கட்டுமானத்திற்கு தகுந்த இடம் என சான்று அளிக்கப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ’கரோனாவை தடுக்க அளவாக மது அருந்துங்கள்’ - மாநகராட்சியின் அக்கறைக்கு மது குடிப்போர் சங்கம் வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.