முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், இங்கு ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத பௌர்ணமி உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் நகர் வீதிகளில் முருகப்பெருமான் உலா வருவது தவிர்க்கப்பட்டது.
கரோனா வைரஸ் பெருந்தொற்றின் வீரியம் அதிகரிப்பதன் காரணமாகவும், பொதுமக்களின் கூட்டத்தினை தவிர்க்கும் வகையிலும் ஐப்பசி மாத பௌர்ணமி உற்சவ திருவிழா ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயிலுக்குள் நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.