ETV Bharat / state

ஓட்டுநரைக் கொலை செய்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு! - மதுரை ஓட்டுநர் கொலை

மதுரை: திருமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் தனது ஓட்டுநரை கொலை செய்ததாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கொலை செய்யப்பட்டவரின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

thirumangalam admk secretary got allegations on killing his driver and their family protests
ஓட்டுநர் கொலை வழக்கு; அதிமுக நகரச் செயலாளரை கைது செய்யக்கோரி போராட்டம்!
author img

By

Published : Jun 12, 2020, 2:25 AM IST

மதுரையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் விஜயன் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். மணிகண்டனின் நண்பரும், அதிமுக நிர்வாகி விஜயனின் மகளும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், அதற்கு மணிகண்டன் உதவியதால்தான் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து மணிகண்டன் கொலை வழக்கில் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவாக செயல்படும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே மணிகண்டனின் மனைவி தீபிகா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

thirumangalam admk secretary got allegations on killing his driver and their family protests
காவல் துறையினருடன் வாக்குவாதம்
ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வலியுறுத்தி, திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, காவல் துறையினருடன் போராட்டத்திற்கு தலைமை வகித்த மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, தீபிகா உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், செக்கானூரணி காவல் நிலையத்தில் உள்ள குண்டாறு என்கிற சக்திவேல், திருவிடைமருதூரில் சரணடைந்துள்ள பிரகாஷ் ஆகிய இருவரிடமும் முழுமையான விசாரணைக்கு பின்பே கொலைக்கு அதிமுக நகரச் செயலாளர் உடந்தையா என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.