ETV Bharat / state

நீட் விலக்கு மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் - திருமா! - திருமாவளவன்

மதுரை: இரண்டு நீட் விலக்கு சட்ட மசோதாக்களை இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீண்டும் நீட்
author img

By

Published : Jul 20, 2019, 9:54 PM IST

மதுரையில் நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தென்காசி மற்றும் திருநெல்வேலியை இரண்டு மாவட்டங்களாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. துப்புரவு பணியாளர்களுக்கு பிற மாநிலங்களில் நவீன உபகரணங்கள் வழங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு சார்பாக வழங்கப்பட்டது. ஆனால் இன்றும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் சூழல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை பட்ஜெட் அறிவிப்பிலும் நிதி ஒதுக்கீடு வரும் நிலையில், தவிர்க்கப்படாமல் தொடர்வது கண்டிக்கத்தக்கது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாக்களை குடியரசுத் தலைவர் முன்னதாகவே நிராகரித்துவிட்டார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு மீண்டும் இரண்டு சட்ட மசோதாக்களை இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வு மட்டுமல்ல, தற்போது ஐந்தாம் ஆண்டில் மருத்துவக் கல்லூரி முடித்தவர்களுக்கு NEXT என்ற புதிய தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் நீட் விலக்கு கோரி போராட்டம் நடத்துவோம்” என்றார்.

Intro:பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை திட்டமிட்டே தடுக்கிறது பாஜக திருமாவளவன் குற்றச்சாட்டு

இந்தியைத் தொடர்ந்து திணிக்க முயற்சி செய்யும் மத்திய பாஜக அரசு பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தடையாக இருந்து வருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டிBody:பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை திட்டமிட்டே தடுக்கிறது பாஜக திருமாவளவன் குற்றச்சாட்டு

இந்தியைத் தொடர்ந்து திணிக்க முயற்சி செய்யும் மத்திய பாஜக அரசு பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தடையாக இருந்து வருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி

நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அரசரடியில் உள்ள இறையியல் கல்லூரி நடைபெற உள்ள கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு மதுரை வந்தார்.

தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது, புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளன்று சென்னை விடுதலை கட்சிகள் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழா இந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஜூலை 29 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

தற்போது தமிழக அரசு தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இரு மாவட்டங்களாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியாகவும், வரவேற்கத்தகதாவும் உள்ளது.

துப்புரவு பணியாளர்களுக்கு பிற மாநிலங்களில் நவீன உபகரணங்கள் வழங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் வழங்கினர். ஆனால் இன்னும் மனிதக்கழிவுகளை கையால் அள்ளும் அவலங்கள் நடைபெறுகிறது. இது தொடர்வது தவிர்க்கப்பட வேண்டும்.
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு வரும் நிலையில் இன்னும் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுவது தொடர்ந்து நடைபெறுவது கண்டிக்கத்தக்கது.

தமிழிசை சௌந்தர்ராஜன் திமுக தலைவர் ஆட்சி அமைப்பது நிறைவேறாத கனவு எனக் கூறுவது குறித்த கேள்விக்கு_

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்படவே செய்யாது என்று கூறுவது அவருடைய ஆசையாக உள்ளது அவரது நிறைவேறாத ஆசை பட்டியலில் இதுவும் ஒன்று.

இந்திய மக்களை ஹிந்தி மட்டும் பேச வேண்டும் என்றும் மற்ற பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று திட்டமிட்டே தான் பாஜக அரசு செயல்படுகிறது.

நீட் தேர்வு மட்டுமல்ல, தற்போது ஐந்தாம் ஆண்டில் மருத்துவ கல்லூரி முடித்தவர்கள் next என்ற புதிய தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. தொடர்ந்து பாராளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் நீட் விலக்கு கோரி போராட்டம் நடத்துவோம். நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாக்கள் குடியரசுத் தலைவர் முன்னதாகவே நிராகரித்து விட்டார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

எனவே தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் மீண்டும் இரண்டு சட்ட மசோதாக்களை இயற்றிய குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நீட் தேர்வை விலக்கு அளிக்க வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் போன்ற ஒரு ஆபத்தான திட்டம் அடுத்த தலைமுறைக்கு ஆபத்தானது. சுற்றுசூழலை பாதிக்கக் கூடியது குடிநீரை நஞ்சாக்குகிறது திட்டம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை வரவேற்கிறவர்கள் அடுத்த தலைமுறையின் எதிரிகள் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.