ETV Bharat / state

'இனிமே என் குடும்பத்த நான் எப்படி காப்பாத்துவேன்..?' - அழகர் விழாவில் உயிரிழந்தவரின் மனைவி வேதனை! - திருவிழாவில் உயிரிழந்தவரின் மனைவி கதறல்

மதுரை கள்ளழகர் வைகையாற்று எழுந்தருளல் நிகழ்வின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் இறந்தவரின் மனைவி ஈடிவி பாரத் தமிழ் ஊடக செய்தியாளருக்கு அளித்த அலைபேசி பேட்டியைக்காணலாம்.

அழகர் விழாவில் உயிரிழந்தவரின் மனைவி கதறல்

author img

By

Published : Apr 16, 2022, 10:57 PM IST

மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் மைய நிகழ்ச்சியான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல் வைபவத்தில் பங்கேற்பதற்காக, ஸ்ரீகள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் தல்லாகுளத்திலிருந்து வைகையாறு நோக்கி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய வண்ணம் இன்று அதிகாலை 5 மணியளவில் வந்து கொண்டிருந்தார்.

அச்சமயம் கோரிப்பாளையம் அருகே, கள்ளழகரைக் காண்பதற்காக நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டம், நெருக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது, கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி மதுரை செல்லூரைச் சேர்ந்த 62 வயது முதிய பெண்மணி ஜெயலட்சுமியும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள கோகிலாபுரத்தைச் சேர்ந்த 42 வயதான செல்வம் என்பவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஈடிவி பாரத் ஊடக நிருபரைத் தொடர்பு கொண்ட செல்வத்தின் மனைவி சந்திரா கதறி அழுதவாறு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எனது கணவர் உத்தமபாளையம், அருகேயுள்ள கோகிலாபுரத்தில் தையல்கடை நடத்தி வந்தார். அந்த வருமானத்தில்தான் நானும் என் குழந்தைகளும் வாழ்ந்து வந்தோம். எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்த நிலையில் எங்கள் குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது. என் குழந்தைகளைக் காப்பாற்ற என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை” என வேதனை தெரிவித்தார்.

தேனி அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் செல்வத்தின் மூத்த பெண் ஹர்சினி 10-ஆம் வகுப்பும், இளைய மகன் சுபிக்ஷன் 1ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். கள்ளழகரை வணங்குவதில் மிகுந்த விருப்பம் கொண்ட செல்வம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல், சித்திரைத் திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். நண்பர்களோடு வந்துவிட்டு, உடனடியாக தேனி திரும்பிவிடுவார்.

நேற்றும் வழக்கம்போல் பிற்பகல் 3.30 மணியளவில் தேனியிலிருந்து புறப்பட்டு மதுரை வந்தவர், வைகையாற்றின் அருகே நண்பர்களோடு தங்கியிருந்தபோது, கூட்டத்தில் நண்பர்களைப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் கோகிலாபுரத்திலுள்ள சந்திராவின் வீட்டிற்கு காவல் துறையினர் சென்று விசாரித்தபோதுதான் அவர் இறந்துபோன விவரம் சந்திராவுக்குத் தெரியவந்துள்ளது.
அரசு வேலை வழங்க வேண்டும்: மேலும் சந்திராவின் உறவினர் நாகேந்திரன் கூறுகையில், “தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை சற்றே ஆறுதல் அளித்தாலும், குழந்தைகள் இருவரின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு, 8ஆவது வரை படித்துள்ள சந்திராவின் கல்வித் தகுதிக்கேற்ற வேலையினை அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் அவருடைய குழந்தைகளை அவரால் காப்பாற்ற முடியும். முதலமைச்சர் ஸ்டாலின் கருணையோடு இதனைப் பரிசீலிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: மதுரை கள்ளழகர் நிகழ்வில் இருவர் உயிரிழப்பு: காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.