அழகர்கோவில் சாலையில் உள்ள நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தின், முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பாக இன்று ஒருநாள் அடையாள போராட்டம் நடைபெற்றது. சாலைப் பணியாளர்களின் நெடு நாட்களாக கிடப்பில் உள்ள வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் உரிய ஆணையை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தமிழ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "13 ஆண்டுகளுக்கு மேலாக சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றப்படவில்லை. மேலும் உரிமைகளை கேட்டு போராடும் பணியாளர்கள் மீது காவல் துறையை ஏவிவிட்டு தாக்குதல் நடத்துவதை நெடுஞ்சாலைத் துறை உடனடியாக கைவிட வேண்டும். முதன்மை இயக்குநர், நிர்வாகப் பொறுப்பில் உள்ள பொறியாளர்களை நியமனம் செய்தால் அவர்கள் ஒரு தலைப்பட்சமாகவே செயல்படுவதாகவும், இந்தத் துறைக்கு இந்திய ஆட்சிப்பணி அலுவலரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்.
அதேபோல் சாலைப் பணியாளர்கள், அவர்கள் குடும்பங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டும் முதன்மை இயக்குநரும் தலைமைப் பொறியாளர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.