மதுரை மாட்டுத்தாவணி அருகே மலர் சந்தை இயங்கிவருகிறது. இங்கிருந்துதான் தென்மாவட்டங்களுக்கு பல்வேறு வகையான மலர்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக இங்கிருந்த மலர் சந்தையானது தற்போது சர்வேயர் காலனி, வலையங்குளம் உள்ளிட்ட நான்கு இடங்களில் வைத்து விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இன்று (ஆக்.22) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சர்வேயர் காலனி பூ சந்தையில் மலர் வரத்து குறைவாகவே இருந்தாலும், விலை இரண்டு மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் சென்றனர். நேற்று ரூ.350 விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ இன்று ரூ.800க்கும், ரூ.350க்கு விற்பனை செய்யப்பட்ட சம்மங்கி ரூ.700க்கும், ரூ.300க்கு விற்கப்பட்ட ரோஜா பூ ரூ.600க்கும், ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டன் ரோஸ் ரூ.400க்கும் விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, ”இன்னும் இரண்டு தினங்களில் பழைய இடத்திற்கே சந்தை வந்து விட்டால் விலையானது ஒரே மாதிரியாக சீராகும்” என்றனர்.
இதையும் படிங்க: மண்டியிட்டு விநாயகரை வணங்கிய யானைகள்
!