ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவி வழங்கிய நிதி அமைச்சர் - Finance Minister provided welfare assistance

மதுரையில் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவி வழங்கிய நிதி அமைச்சர்

author img

By

Published : Aug 13, 2022, 9:41 AM IST

மதுரை: மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சருமான பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், மத்திய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே இரண்டு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மதிப்பீட்டு முகாமை நடத்த ஏற்பாடு செய்தார்.

அதன் அடிப்படையில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்றார். அங்கு அமைச்சர், ஸ்மார்ட் போன்கள்,காது கேட்கும் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவி வழங்கிய நிதி அமைச்சர்

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்,மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்ததால் மிரட்டல் வருகிறது என புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.