நித்யானந்தா கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தினந்தோறும் புதிய புதிய அறிவிப்புகளை நித்யானந்தா வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பொருளாதார மேம்பாட்டு அறிவிப்பாக கைலாசா நாட்டிற்கான நாணயங்கள், பணத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்போவதாக அறிவித்த நிலையில் இன்று (ஆக.22) காலையில் கைலாசா நாட்டிற்கான பொற்காசுகளை வெளியிட்டார்
தொடர்ந்து இந்து நாடுகளோடு பொருளாதார ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் ஹோட்டல் திறக்க அனுமதி கோரி மதுரை டெம்பிள்சிட்டி ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் குமார் நித்யானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
நித்யானந்தா பக்தர்களை கவர புதிய யுக்திகளை கையாள்வதை போல கைலாசா மக்களை ஈர்க்கும் வகையில் மாஸ்க் புரோட்டா , கரோனா தோசை உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ஆண்டி முதல் அரசாட்சி வரை' - இது நித்தியின் தாண்டவம்!