மதுரை: செல்லூர் அருகே மனோகரா நடுநிலைப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் பால் ஜெயக்குமார்.
அவரது நீண்ட நெடுங்கால கல்வி சேவையை பாராட்டும் வகையில் அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் பிரம்படி வாங்கி வாழ்த்து கூறினர்.
இதுகுறித்து சங்கரபாண்டியன் கூறுகையில், "மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் பிரம்படி கொடுத்து தண்டிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் மனித உரிமை, குழந்தைகள் உரிமை என பேசுகின்ற நிலை வந்துவிட்டது.
முன்பெல்லாம் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்கள் கண்டிப்பு காட்டினார்கள். அதனை நினைவுப்படுத்தும் வகையில் எங்களது முன்னாள் தலைமை ஆசிரியரிடம் பிரம்படி வாங்கி வாழ்த்து கூறினோம்.
ஏனெனில் ஆசிரியர்கள் கண்டிப்பாக இருந்தால்தான் மாணவர்கள் உயர் நிலைக்கு செல்ல முடியும்.
கோரிப்பாளையம் மூங்கில் கடைத் தெருவில் வாத்தியார் பிரம்பு என்றே விற்பனையாகும். இன்றைக்கு பிரம்பு விற்பனை நலிந்து போய் உள்ளதாக கடைக்காரர்கள் எங்களிடம் கூறி வருத்தப்பட்டனர்" என்றார்.
இதையும் படிங்க: பள்ளிக்கு வர வேண்டாம்... மாணவர்களுக்கு திடீர் அறிவிப்பு!