தற்போது அரசு டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. இந்நிலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க வேண்டும் என கோரியுள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.