ETV Bharat / state

பட்டயபடிப்பு தொடக்க கல்வி தேர்வு மீண்டும் நடத்தகோரி வழக்கு: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு - பட்டயபடிப்பு தொடக்க கல்வி தேர்வு மீண்டும் நடத்தகோரி வழக்கு

மதுரை: பட்டயபடிப்பு தொடக்கக் கல்வி (Dip in Elementary Education Course) தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

mdu
mdu
author img

By

Published : Apr 8, 2021, 6:40 PM IST

திருநெல்வேலியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "நான் பட்டயப்படிப்பு தொடக்கக் கல்வி (Dip in Elementary Education Course) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். பட்டயப்படிப்பு தொடக்கக் கல்வியை அதிக அளவில் பெண்களே படித்து வருகிறோம். போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் வகுப்புகளுக்கு சரியாக செல்ல முடியாமல் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிப்படைந்து இருந்தோம்.

இந்த நிலையில் எங்களுக்கு 2020ஆம் ஆண்டுக்கான தேர்வு நடைபெற்றது. கரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வந்த நேரம் என்பதால் தேர்வுக்கு செல்வதிலிருந்து மீண்டும் வீடுகளுக்கு வரும் வரை உடலளவிலும், மனதளவிலும், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. பட்டயப்படிப்பு தொடக்கக் கல்வி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிந்து தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், தமிழ்நாடு முழுவதும் 98.5 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை, இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே எங்களுக்கு மீண்டும் இணையதளம் மூலமாக அல்லது மறு தேர்வு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் வழக்கு குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஏகநாதர் குரு மண்டபம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.