மதுரை: 'பொடாவில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறைச்சாலையில் பழ.நெடுமாறன் இருந்தபோது, வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறையில் நான் அடைக்கப்பட்டபோது நாங்கள் இருவரும் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டோம்' என மதுரையில் பழ.நெடுமாறனைச் சந்தித்த அனுபவத்தைக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.#POTA-வில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே… pic.twitter.com/UyapxZHdu5
— M.K.Stalin (@mkstalin) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.#POTA-வில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே… pic.twitter.com/UyapxZHdu5
— M.K.Stalin (@mkstalin) October 30, 2023மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.#POTA-வில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே… pic.twitter.com/UyapxZHdu5
— M.K.Stalin (@mkstalin) October 30, 2023
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நிகழ்வில் இன்று (அக்.30) பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிறகு மதுரை திரும்பிய அவர், உடல் நலிவுற்று மதுரையிலுள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வரும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவரிடம் உரையாடிய அனுபவத்தை எனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.
அதில், 'மு.க.ஸ்டாலின், 'மதுரைக்குச் சென்றிருந்தபோது உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் உடல் நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.
பொடாவில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையிலிருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அப்போது ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்து பகிர்ந்து கொண்டோம். அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்' என அதில் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! பால பணிகளையும் துவக்கி வைத்தார்!