மதுரையில் தனியார் விடுதியில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் புதிததாக இயற்றப்பட்டுள்ள விவசாய சட்ட மசோதாவானது விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. புதிய விவசாய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். புதிய விவசாய சட்டத்தால் வரிகள் குறையும், புதிய சட்டத்தால் நேரடி வர்த்தகம் ஊக்குவிக்கப்படும்.
மேலும் புதிய சட்டத்தால் வெளிநாடு, உள்நாட்டு ஏற்றுமதி அதிகரிப்பதோடு இடைத்தரகர்கள் முறைக்கு வாய்ப்பு இல்லை. விளை பொருள்களை கள்ள சந்தையில் பதுக்க முடியாது, விவசாயிகளுக்கு அதிக லாபத்தை உருவாக்கும் சட்டமாக இப்புதிய சட்டம் விளங்கும்.
உள்ளூர் மொழிகளில் இருக்கும் புதிய விவசாய ஒப்பந்த சட்டங்களானது வரவேற்கக்கூடியதாக உள்ளது. இப்புதிய மசோதாக்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தவறாக பரப்புரை செய்வதோடு மட்டுமில்லாமல் விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 41 லட்சம் விவசாயிகளுக்கு கிஷான் திட்டம் மூலம் உதவி வழங்கப்பட்டுள்ளது. விளைவிக்கும் பொருள்களை உலக அளவில் சந்தைப்படுத்தவே புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மட்டுமே அவர்களின் விளைபொருள்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியும். கிஷான் திட்ட மோசடியில் தமிழ்நாடு அரசு இன்னும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதிமுக - பாஜகவுக்கு இடையே எந்தவொரு மனக்கசப்பும் கிடையாது. தொடர்ந்து இதே கூட்டணி தொடரும்” என்றார்.
இதையும் படிங்க: 'விவசாயிகளிடம் பொய் கூறுவதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்' - ப. சிதம்பரம்