சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் நடிகர் தவசி. 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனத்தின் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.
அடர்த்தியான மீசையும், தாடியும் இவரது அடையாளமாகும். 'கிழக்குச் சீமையிலே' என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதன் பின் 'ரஜினி முருகன்', ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 'அண்ணாத்த' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
தவசியின் செந்த ஊர் தேனி மாவட்டம் சங்கராபுரம். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் மிகவும் ஏழ்மை நிலையில் வாடுவதாகவும், தமிழ் திரையுலகம் இவருக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்து காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்தாண்டு செப்டம்பர் 2ஆம் தேதி தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடைபெற்ற விபத்தில் நடிகர் தவசி படுகாயம் அடைந்தார். தற்போது இவருக்கு உதவ நடிகர் சூரி முன்வந்துள்ளார்.