மதுரை: கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மேலூர் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மு.க.அழகிரி உள்ளிட்ட 14 பேர் மீது மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆரம்பக் காலத்தில், இந்த வழக்கு விசாரணையின்போது மு.க.அழகிரி உட்பட யாரும் ஆஜராகவில்லை என தெரிகிறது.
அத்துடன் தாசில்தாரை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் மு.க.அழகிரிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக மு.க.அழகிரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (டிச.21) ஆஜரானார்.
இதையும் படிங்க: இயற்கை வேளாண்மைக்கு விரைவில் புவிசார் குறியீடு: ராமகிருஷ்ணன் எம்எல்ஏ