மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்களாகப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூன்று பேரை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்துள்ளார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட இவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிண்டிகேட் உறுப்பினர்களாக, சிண்டிகேட் குழுவில் அங்கம் வகிப்பர் என மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு ( சிண்டிகேட் )
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் சார்பில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கு ஆளுநரின் பிரநிதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
இந்நடைமுறையின் அடிப்படையில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கு (சிண்டிகேட்) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பிரெஞ்ச் மொழித்துறைத் தலைவரும் முன்னாள் பதிவாளருமான ஆர்.சுதா, பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் எம்.தங்கராஜ், தொடர்பியல் துறையின் தலைவர் எஸ்.நாகரத்தினம் ஆகிய மூவரும் ஆளுநரின் பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிண்டிகேட் பணி என்ன
பல்கலைக்கழகத்தின் அனைத்து முடிவுகளுக்கும், உச்ச அமைப்பான சிண்டிகேட் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர், நிரந்தர உறுப்பினர் தவிர, குறைந்தது 15 உறுப்பினர்கள் சிண்டிகேட் குழுவில் இடம்பெறுவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
இதையும் படிங்க: ”அதிமுக அரசின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இயேசுபிரான் பார்த்துக் கொள்வார்”