ETV Bharat / state

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்! - alanganallur sugar factory protest

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க வேண்டும், கரும்பு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

alanganallur sugar factory protest
கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
author img

By

Published : Nov 3, 2020, 5:06 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைந்துள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கரும்புகளை அனுப்பி வந்தனர். இந்த ஆலையின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர். ஆனால், ஆலையில் சர்க்கரை உற்பத்திக்கு தேவையான கரும்பு இல்லை எனக்கூறி ஆலை நிர்வாகம் இந்தாண்டு கரும்பு அரவையை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வேண்டும், ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகை 22 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

alanganallur sugar factory protest
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்

ஆலை முன்பாக திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதோடு தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்துச் செல்ல மாட்டோம் எனக்கூறி அலுவலக வளாகத்திலே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, விவசாயிகளிடையே காவல்துறையினரும், ஆலை அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.