ETV Bharat / state

எந்தக் கட்சியாக இருந்தாலும் ஓகே... கம்யூனிஸ்டுகளுக்கு தடை கிடையாது

மதுரை: 'மதுரையின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயல்பட கம்யூனிஸ்டாக எங்களுக்கு எந்த தடையும் இல்லை' என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன்
author img

By

Published : May 26, 2019, 10:07 AM IST

நடைபெற்று முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் நான்கு லட்சத்திற்கு மேலான வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இவரது வெற்றியை மதுரை மக்கள் மட்டும் அல்ல தமிழ்நாடே கொண்டாடிவருகிறது. இந்நிலையில், மதுரை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்

அப்போது, 'எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளது போல, ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்து மதுரையின் வளர்ச்சிக்காக அனைவருடன் இணைந்து செயல்படுவேன். இது மன்னர் ஆட்சி அல்ல; ஜனநாயக யுகம். அதில் எதிர்க்கட்சியின் பங்கு மிக முக்கியம். ஒரு தட்டு மட்டும் இருந்தால் அது சாப்பிட மட்டுமே பயன்படும். ஆனால் இரண்டு தட்டு இருந்தால்தான் அது நீதியை நிலை நாட்டும்.

தமிழ்நாட்டில் திமுக சார்பில் வெற்றிபெற்ற 37 பேரும் இந்திய முகமாக செயல்படுவார்கள். மதுரையின் வளர்ச்சிக்காக அதிமுகவின் இரண்டு அமைச்சர்களுடன் சேர்ந்து செயல்படுவோம். கம்யூனிஸ்டுகள் எந்த காலத்திலும் நல்ல திட்டங்களுக்கு தடையாக இருந்தது இல்லை. நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான போராட்டங்களையே நாங்கள் நடத்தியுள்ளோம். மதுரையின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயல்பட கம்யூனிஸ்டாக எங்களுக்கு எந்த தடையும் இல்லை' என்றார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
25.05.2019

*மதுரையின் நலனுக்காக அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்பட கம்யூனிஸ்டாக எங்களுக்கு எந்த தடையும் இல்லை : சு.வெங்கடேசன்*

மதுரை மார்சக்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியது,

எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து பேருக்கும் நன்றியை கூறினார்.

பின்னர் கூறுகையில்,
எங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளது போல, ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்து மதுரையின் வளர்ச்சிக்காக அனைவருடன் இணைந்து செயல்படுவேன் என்றார்.

இது மன்னர் ஆட்சி அல்ல இது ஜனநாயக யுகம் அதில் எதிர் கட்சியின் பங்கு மிக முக்கியம். ஒரு தட்டு மட்டும் இருந்தால் அது சாப்பிடமட்டுமே பயன்படும், ஆனால் இரண்டு தட்டு இருந்தால் தான் அது நீதியை நிலை நாட்டும் நீதி தேவதை கையில் உள்ள நீதி தட்டு.

தமிழகத்தில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 38 பேரும் இந்திய முகமாக செயல்படும்,

ராஜன் செல்லப்பா அவர்கள் கூறியது போல மதுரையின் மிக முக்கிய தேவையாக நிழற்குடை உள்ளது அதை அமைப்பேன்.

மதுரையின் வளர்ச்சிக்காக அதிமுகாவின் இரண்டு அமைச்சர்களுடன் சேர்ந்து செயல்படுவோம்.

தற்போது ராஜன் செல்லப்பா அவர்கள் கூறி வருவதால் பயன் ஒன்றும் இல்லை மக்கள் தேர்தலுக்கு முன்பு வினாவை பார்த்து தற்போது விடை அளித்துள்ளனர் அளித்துள்ளனர்  இப்போது மீண்டும் அந்த வினாவையும் விடையையும் பார்ப்பதால் பயன் ஒன்றும் இல்லை, அதனால் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என என்றார்.

கைவிடப்பட்ட மதுரையை முன்னேற்ற மதுரையில் உள்ள தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலருடன் இணைந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட எனது பணி முதன்மையான பணியாக இருக்கும்.

கம்யூனிஸ்டுகள் எந்த காலத்திலும் நல்ல திட்டங்களுக்கு தடையாக இருந்தது இல்லை. கொண்டு வருவதற்கான போராட்டங்களையே நாங்கள் நடத்தியுள்ளோம் என்றார்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் சேலம் எஃக் ஆலையில் இருந்து கம்யூனிஸ்டுகள் பாடு பட்டு உள்ளது. மதுரையின் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் மூலமாகவே கேந்திரிய வித்யாலயா அவர்கள் மூலமாகவே கேந்திரிய வித்யாலயா இரண்டாவது பள்ளி கொண்டுவருவதற்கும், விமான நிலையம் விரிவாக்கத்திற்கும், எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதற்கும் குரல் கொடுத்தார்.

மதுரையின் நலனுக்காக அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்பட கம்யூனிஸ்டாக எங்களுக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறினார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_01_25_SU.VENKATESAN PRESS MEET_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.