ETV Bharat / state

கம்பம் அருகே இடி மின்னல் தாக்கி 3 பசு மாடுகள் பலி! - Kamayagoundanpatti

தேனி : கம்பம் பகுதியில் நேற்று (மே 28) பெய்த பலத்த மழையில், இடி மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

strong winds and rain in the kambam 3 cows killed struck by lightning
கம்பம் அருகே இடிமின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி!
author img

By

Published : May 29, 2020, 3:56 PM IST

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பொழிந்தது. இதனால், ஆங்காங்கே சிறிய மரங்கள் சரிந்தன. மேலும், சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை அடுத்த தண்ணீர்பாறை தோட்டத்தில் முருகன் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் தென்னை மரத்துக்கு அடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பசு மாடுகள் மீது இடி தாக்கி பரிதாபதாக உயிரிழந்தன.

இதனையடுத்து காமயகவுண்டன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர், இறந்த மாடுகளின் உடல்களை பரிசோதனை செய்த பின்பு தோட்டத்திலேயே 3 மாடுகளும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டன.

இதுகுறித்து விவசாயி முருகன் கூறுகையில், "மிகவும் கஷ்டப்பட்டு மாடுகளை வளர்த்து வந்தேன். திடீரென இடி தாக்கியதில் மூன்று மாடுகள் இறந்து போயின. இறந்துபோன மாடுகளில், இரண்டு மாடுகள் சினையாக இருந்தன. இந்த மூன்று மாடுகளின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாயாகும். எனவே, தமிழ்நாடு அரசு இடி மின்னல் தாக்கி மாடுகள் உயிரிழந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

கம்பம் அருகே இடிமின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி!

இது தொடர்பாக வருவாய் துறையினரும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடி தாக்கி மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குடிபெயர்ந்தோர் சொந்த ஊர் செல்வதைத் தடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.