ETV Bharat / state

Madurai Train Accident: உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு நிறைவு - நாளை விசாரணை! - மதுரை ரயில் விபத்து சிசிடிவி

மதுரை ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சட்டப்பூர்வ விசாரணை நாளை (ஆக.27) நடத்தப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 7:00 PM IST

Updated : Aug 26, 2023, 7:49 PM IST

மதுரை: மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று இன்று (ஆக.26) அதிகாலையில் தீடீரென தீப்பிடித்து எரிந்தது. ரயிலில் பற்றிய தீ அருகே இருந்த மற்றொரு ரயிலுக்கும் பரவிய நிலையில் துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தினர். எரியும் ரயிலிலிருந்து பலரும் குதித்து உயிர் தப்பிய நிலையில், ஒருசிலர் ரயிலினுள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இந்த தீ விபத்தில், 5 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இரண்டு பேர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயிரிழந்தவர்களில் உடல்களை உடற்கூராய்வு செய்து பின்னர் எம்பாமிங் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து லக்னோவுக்கு இறந்தவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த தீ விபத்து குறித்து சட்டப்பூர்வ விசாரணையை ஸ்டேஷன் யார்டு தலைமையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள டிஆர்எம் மாநாட்டு அரங்கில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.30 மணிக்கு விசாரணை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயம் தொடர்பாகத் தெரிந்த மற்றும் சாட்சியமளிக்க விரும்பும் எந்தவொரு பொதுமக்களும் 27 ஆகஸ்ட் 2023 அன்று மதுரையில் உள்ள கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள டிஆர்எம் மாநாட்டு மண்டபத்தில் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Madurai Train Fire Accident: வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. பூட்டப்பட்ட கதவுகள்.. அப்பட்டமான விதிமீறல்..?

Last Updated : Aug 26, 2023, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.