ETV Bharat / state

Madurai train fire accident: பயண நிறுவனம் வழங்கிய சிலிண்டரில் தான் சமைத்து வந்ததாக பயணி தகவல்! - cylinder blast inside train coach

லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் உள்ள முக்கிய ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த குழுவினருக்கு பயண நிறுவனமே சிலிண்டரை வழங்கியதாக பயணி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madurai train fire accident: பயண நிறுவனம் வழங்கிய சிலிண்டரில் தான் சமைத்து வந்ததாக பயணி தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 2:34 PM IST

Madurai train fire accident: பயண நிறுவனம் வழங்கிய சிலிண்டரில் தான் சமைத்து வந்ததாக பயணி தகவல்!

மதுரை: சுற்றுலா பயணத்தை முடிவு செய்த பயண நிறுவனமே இரண்டு 16 கிலோ சிலிண்டரை வழங்கியதாகவும், தினமும் அதனை பயன்படுத்தியே சமைத்து வந்ததாகவும் பயணி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து 55 பேர் கொண்ட குழுவினர் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று(25.08.2023) நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று(26.08.2023) அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.

இவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி மதுரை சந்திப்பிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை - போடி ரயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை சுமார் 5.15 மணியளவில் ரயில் பெட்டியிலிருந்த நபர்கள் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பயன்படுத்தியபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப்பணிக்காக தன்னார்வலரான செல்லதுரை என்பவர் சென்றுள்ளார். காலை ஆறு மணியளவில் அவர் அங்கு செல்லும்போது தீயணைப்புத்துறை வாகனம், ஆம்புலன்ஸ் என அனைத்தும் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருந்ததாகக் கூறியுள்ளார். இந்நிலையில் 6 ஆண்கள், 3 பெண்கள் என 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு கருப்பு பாலித்தீன் பையில் கட்டப்பட்டிருந்ததாகவும், பின்னர் உடல்களை தான் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

மற்ற பயணிகள் அனைவரும் பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், காயமடைந்தவர்களில் பலர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதன் கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பிரதாப் ஷிங் எனும் பயணி அவரது மனைவியை காணவில்லை என கூறியுள்ளார்.

அவரிடம் செல்லதுரை பயணம் குறித்து மேலும் விசாரிக்கையில் பாஷின் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் ( Bhasin tours and travels) நிறுவனத்தின் மூலம் 63 சுற்றுலா பயணிகள் கொண்ட குழுவை ஏற்பாடு செய்து ஆள் ஒன்றுக்கு 21 ஆயிரத்து 700 ரூபாய் செலவில் அந்த நிறுவனம் பயண ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க: Madurai Train Fire Accident: "எரியும் ரயிலிலிருந்து மரண ஓலம்".. விபத்தை நேரில்பார்த்தவர்களின் விளக்கம்..!

இந்த குழுவினர், உத்திர பிரதேசத்தின் சீத்தாபூரில் இருந்து லக்னோ வந்துள்ளனர். பின்னர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி லக்னோவிலிருந்து கிளம்பி 18 ஆம் தேதி விஜயவாடா வந்துள்ளனர். தொடர்ந்து 19 ஆம் தேதி விஜயவாடாவிலிருந்து மைசூர் சென்ற இந்த குழு 22 ஆம் தேதி ரேனிகுண்டா சென்றுவிட்டு அங்கிருந்து நாகர்கோவில் வந்துள்ளனர்.

நாகர்கோவில் பத்மநாபசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சுற்றுலா பயணிகள், இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு நாளை ராமேஸ்வரம் செல்ல இருந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் சுற்றுலாவை முடிவு செய்த அந்த பயண நிறுவனமே இரண்டு 16 கிலோ சிலிண்டரை வழங்கியதாகவும், தினமும் அதனை பயன்படுத்தியே சமைத்து வந்ததாகவும் கூறியுள்ளார். காலை வழக்கம்போல தேநீர் தயாரிக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என பிரதாப் ஷிங் கூறியதாக செல்லதுரை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதாப் ஷிங் முதலில் தீப்பிடித்ததன் சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு தான் சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டதாகவும், கூறியதாக செல்லதுரை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெட்டி பூட்டப்பட்டிருந்ததால் கதவை உடைத்துக்கொண்டுதான் வெளியே வர முடிந்ததாகவும், பலர் எமர்ஜென்சி எக்சிட் வழியாக வெளியேறியதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.

4 பெண்கள் அந்த எமர்ஜென்சி எக்சிட் வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டதாகவும், வெளியே குதித்ததில் பலர் காயமடைந்ததாகவும், பிரதாப் சிங் கூறியதாக செல்லதுரை தெரிவித்துள்ளார். மேலும் பயண நிறுவனத்தின் முகவரி, பயணத்தின் அட்டவணை, அடையாள அட்டை ஆகியவற்றை பயணிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த குழு இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு நாளை ராமேஸ்வரம் சென்று அதன் மறுநாள் சென்னையிலிருந்து லக்னோ செல்ல இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியே சிலீண்டர்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக பிரதாப் ஷிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Madurai Train Fire Accident : 30 நிமிடத்திற்கு பின் வந்த தீயணைப்பு வாகனம்.. ரயில்வே அளித்த விளக்கம் இதுதான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.