ETV Bharat / state

அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் ஒரே நபர் ஸ்டாலின் - செல்லூர் ராஜூ - தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் ஒரே நபர் திமுக தலைவர் ஸ்டாலின்

மதுரை: கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் ஒரே நபர் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

Stalin was the only person who opposed the corona prevention activities of the state said minister sellur raju

author img

By

Published : Apr 23, 2020, 2:28 PM IST

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னுதாரணமாக செயல்படுகிறது இதுகுறித்து மத்திய அரசும், மத்திய சுகாதாரத் துறையும் பாராட்டுகின்றன. மு க ஸ்டாலின் மட்டுமே இதில் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டினார்.

மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஐந்தாயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 24 வகையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்தார்.

அப்போது தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலர்மாலை, பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மக்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ரேஷன் பொருள்களை பெற டோக்கன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்ற அவர், சட்டம் இயற்றி மக்களை கட்டுப்படுத்துவது என்பது கடினமான ஒன்று எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு எடுத்துவரும் கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் அரசு அலுவர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே அறிவிக்கப்படுகிறது என்றும், இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு, இந்திய மருத்துவத் துறை உள்ளிட்டவை பாராட்டிவரும் சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே எதிர்த்துவருகிறார் என குற்றம்சாட்டினார். அரசியல் காரணங்களுக்காகவே அவர் தனது எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகிறார் எனவும் அவர் கூறினார்.

மதுரையில் நிவாரணப் பொருள்கள் வழங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ

மேலும் பேசிய அவர், அம்மா உணவகங்களில் அரசு இலவசமாகவே உணவுகளை வழங்கிவருகிறது எனவும், இதனை மீறி செயல்படும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சூழ்நிலைகளைப் பொறுத்து ஊரடங்கு தளர்த்தப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.